×

எனர்ஜி டிரிங்க்

தேவையானவை

ஓட்ஸ், கோதுமை மாவு – தலா 1 கப்
பொட்டுக்கடலை, பயத்தமாவு – தலா அரை கப்
தோலுரித்த பாதாம், வால்நட், முந்திரிப்பருப்பு – 1 கப்
ஏலக்காய்ப் பொடி – 1 தேக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கேற்ப
பால் – தேவைக்கேற்ப.

செய்முறை:

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். பிறகு கோதுமை மாவையும், ஓட்ஸையும் வாசனை வரும் வரை வறுக்கவும். பின் பொட்டுக்கடலை, டிரை ஃப்ரூட்ஸ், சர்க்கரையை மிக்ஸியில் பொடிக்கவும். ஓட்ஸ், கோதுமைமாவை ஒரு சுற்று சுற்றி எடுத்துவிட்டு ஏலக்காய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். 1 கப் பாலுக்கு, 1 தேக்கரண்டி எனர்ஜி டிரிங்க் பொடி சேர்த்து கொதிக்கவிட்டு கலந்து கொடுக்க, எளிமையான சத்தான பானம் தினமும் கொடுக்கலாம்.

 

The post எனர்ஜி டிரிங்க் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...